செந்துறை அருகே கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்

செந்துறை அருகே கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகள் தமிழரசி (வயது 18). இவர் தத்தனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வழக்கமாக கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். 

இதுகுறித்து காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனஞ்செழியன் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

அதேபோன்று பொய்யாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி ரஞ்சிதா (24) என்பவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com