சவக்குழியை தோண்டி ரூ.1.5 லட்சம் நகையை அள்ளிச் சென்ற கும்பல்

கர்நாடக மாநிலத்தில் சவக்குழியை தோண்டி வாரிசு இல்லாமல் இறந்த பெண்ணின் பிரேதத்தில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் நகையை அறுவடை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சவக்குழியை தோண்டி ரூ.1.5 லட்சம் நகையை அள்ளிச் சென்ற கும்பல்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம், கலாபுராகி மாவட்டத்துக்குட்ட கஜூரி கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்பாய் டாகே. குழந்தைகள் இல்லாத இவர் வயோதிகம்சார்ந்த காரணத்தால் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த வளையல், மோதிரங்கள் போன்ற தங்க நகைகளுடன் அந்த கிராம மக்கள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

இந்த தகவலை அறிந்த சில மர்மநபர்கள் நேற்றிரவு அந்த சவக்குழியை தோண்டி, பிரேதத்தை வெளியே எடுத்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 கிராம் தங்க நகைகளை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், பிரேம்பாயின் பிரேதத்தை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com