தேன்கனிக்கோட்டை அருகே வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்

தேன்கனிக்கோட்டை அருகே வேப்ப மரத்தில் திடீரென பால் வடிய ஆரம்பித்ததால் பெண்கள் திரண்டு வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வேப்ப மரத்தில் பால் வடிவதை படத்தில் காணலாம்.
வேப்ப மரத்தில் பால் வடிவதை படத்தில் காணலாம்.
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தில் அரசமரம் வேப்பமரம் நடுவில் நாகர் சாமி சிலைகளுக்கு கிராம மக்கள் பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அந்த வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிய ஆரம்பித்தது.

இதை பார்த்த பெண்கள் பரவசமடைந்தனர். அங்கு திரண்டிருந்த பெண்கள் உடனே அந்த மரத்திற்கு விளக்கேற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதையறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டமாக வந்து வேப்ப மரத்தில் பால்வடிவதை பார்த்து பரவசமடைந்து வணங்கி செல்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பால்வடிவதை பார்த்த வண்ணம் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com