உ.பி.யில் சிறுமியை கற்பழித்து உயிரோடு எரித்த கொடூரம் - 3 பேர் மீது வழக்கு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுமி 2 மாதத்திற்கும் மேலாக மூன்று நபர்களால் கற்பழிக்கப்பட்டு, அவரை உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுc
உ.பி.யில் சிறுமியை கற்பழித்து உயிரோடு எரித்த கொடூரம் - 3 பேர் மீது வழக்கு
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த 3 நபர்களால் 2 மாதத்திற்கும் மேலாக பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார். இதை வெளியில் கூறினால் அவள் பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால் சில நாட்களுக்கு முன் சிறுமி தனது பெற்றோரிடம் அனைத்தையும் கூறினார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்த மூவரும் கடந்த புதன் கிழமை சிறுமியின் வீட்டிற்குள் வந்து அவள் மீது எண்ணெயை ஊற்றி தீவைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com