உல்லாசம் அனுபவித்து மைனர் பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர்

ஆண்டிப்பட்டி அருகே மைனர் பெண்ணை உல்லாசம் அனுபவித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உல்லாசம் அனுபவித்து மைனர் பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர்
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரு‌ஷநாடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இதனால் சுரேசும், அந்த பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இளம் வயது காரணமாக அடிக்கடி அத்து மீற தொடங்கியுள்ளனர். அப்போது சுரேஷ் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

மேலும் மைனர் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

தற்போது அந்த பெண்ணிடம் செல்போனில் உள்ள அந்தரங்க படத்தை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மைனர் பெண் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வரு‌ஷநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com