3 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகன் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அலமாரியில் பிணத்தை மறைத்து வைத்திருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
3 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகன் கைது
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள யுனுஸ்பூர் கிராமத்தில் வசித்து வருபவர், லச்லான் சிங் என்பவர். பக்கத்து வீட்டில் உள்ள 3 வயது சிறுமிக்கு உணவு தருவதாக கூறி இவர் நேற்று தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவர், பின்னர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொன்று பிணத்தை வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைத்திருந்தார்.

சிறுமி காணமால் போனதால் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் தேடி உள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அவளை லச்லான் சிங் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, லச்லான் சிங் வீட்டின் அலமாரியில் இருந்த சிறுமியின் பிரேதத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், லச்லான் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com