ராஜஸ்தான்: மது கொடுத்து சிறுமியை கற்பழித்த நபர் கைது

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் சிறுமிக்கு மது கொடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான்: மது கொடுத்து சிறுமியை கற்பழித்த நபர் கைது
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் கோகுல்புரா கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்தவர் தனது காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அச்சிறுமிக்கு மது கொடுத்து காரில் வைத்து கற்பழித்துள்ளார். இதில் சிறுமி மயக்கமடைந்தார்.

பின்னர் சிறுமியை அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவர் மீது குழந்தை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் சிறுமிக்கு மது கொடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com