மீஞ்சூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

மீஞ்சூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு காமராஜர் நகர் ரெயில்வே ஸ்டே‌ஷன் ரோட்டைச்சேர்ந்தவர் முரளி.

தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றார். நேற்று மதியம் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ஒன்றரைகிலோ வெள்ளி, 45 ஆயிரம் ரூபாய் சில்லரை காசுகள் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்த பகுதியில் தினமும் திருட்டு சம்பவம் நடந்த கொண்டிருக்கிறது. போலீசார் ரோந்து வருவது இல்லை. இரவு நேரங்களில் செயின் பறிப்பு நடக்கிறது. சந்தேகத்துக்குரிய நிறைய பேர் சுற்றுகின்றனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்திப்பட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com