மீஞ்சூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை

மீஞ்சூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கத்தை சேர்ந்தவர் முகமது அசன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வில்லிவாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 5½ பவுன் நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com