மீஞ்சூர் அருகே பைனான்சியர் வெட்டிக் கொலை

மீஞ்சூர் அருகே பைனான்சியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

பொன்னேரி:

திருவொற்றியூர், ராஜேஷ்வரி நகரைச் சேர்ந்தவர் சக்கரை (வயது63). சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்கரை திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் அருகே ரெயில் தண்டவாளத்தில் சக்கரை வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது தலை, கழுத்து, வயிற்றில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சக்கரையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை.

பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட தகராறில் சக்கரையை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து விட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து சக்கரையுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். அவர் கடைசியாக யாருடன் செல்போனில் பேசினார் என்றும் விசாரணை நடக்கிறது.

இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பைனான்சியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com