மீஞ்சூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

மீஞ்சூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்கு 10 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை செய்யும் பிரபல் குடியிருக்கிறார். இன்னொரு வீட்டில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வினோத் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு வீட்டில் தேவிகா (65) குடியிருக்கிறார்.

நேற்று 3 வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பிரபல் வீட்டில் 50 ஆயிரம் பணம், 2 சவரன் நகை, வினோத் வீட்டில் 5 ஆயிரம் பணம், 1 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், தேவிகா வீட்டில் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மற்ற 7 வீடுகளில் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு கொள்ளை அடித்துள்ளனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com