மீஞ்சூர், பழவேற்காட்டில் கஞ்சா விற்ற 12 பேர் கைது

மீஞ்சூர், பழவேற்காட்டில் கஞ்சா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா
கஞ்சா
Published on

பொன்னேரி:

மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் வழிப்பறி கொள்ளை, கஞ்சா விற்கும் கும்பலை பொன்னேரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அனுப்பம்பட்டை சேர்ந்த கார்த்திக், தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, தோட்டக்காடு மேட்டுக் காலனியைச் சேர்ந்த பூவரசன், பிரகாஷ்ராஜ், தாங்கல் பெரும்புலம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பழவேற்காடு பகுதியில் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தமிம்சா, பயாஸ், நந்தபாலன், சேக் தாவுத் ஆகியோரை திருப்பாலைவனம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

சோழவரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த உதயா, அழிஞ்சி வாக்கம் அத்திபேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தீபன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com