கொடைக்கானலில் சிறிய ரக விமான சேவை- ஹெலிகாப்டர் வசதிக்கு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

கொடைக்கானலில் சிறிய ரக விமான சேவை மற்றும் ஹெலிகாப்டர் இயக்க ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
கொடைக்கானலில் சிறிய ரக விமான சேவை- ஹெலிகாப்டர் வசதிக்கு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

கொடைக்கானல் நகரில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும். பிரையண்ட் பூங்கா ரூ.5 கோடி செலவில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். கொடைக்கானலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். எனவே இவர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை சிறிய ரக விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வுப்பணி விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com