நாமக்கல்லில் கோழி ஆராய்ச்சி நிலையம் அமைக்க பரிசீலனை-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

நாமக்கல் பகுதியில் கோழி ஆராய்ச்சி மையம் இந்தாண்டு தொடங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
Published on

நாமக்கல், செப். 11-

நாமக்கல் வந்த தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக அளவில் மிக பிரமாண்டமான முறையில் கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் உருவாகி கொண்டிருக்கிறது. நாமக் கல்லில் ஏற்கனவே கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் உள்ளது. கோழிகள், முட்டைகள் அதிக அளவில் உற்பத்தி ஆகுவதால் நாமக்கல் பகுதியில் கூடிய விரைவில் ஆராய்ச்சி நிலையங்களை அமைக்க முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும். நாமக்கல்லை தனிமண்டலமாக அமைக்க கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோழி, முட்டை உற்பத்தியாளர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தார். கொரோனா காலத்தில் அனைத்து பகுதியிலுமே தடை உத்தரவு பிற்பிக்கப்பட்ட நிலையில் முட்டைகள் அதிக அளவில் தேங்குவதாக கூறியவுடன் முதல் அமைச்சர் முட்டைகள், கறிக்கோழிகளை உடனடியாக விற்பனை செய்ய அனைத்து வழி வகைகளும் செய்து கொடுத்தார்.

அதற்காக நாமக்கல், பல்லடம் பகுதிகளை சேர்ந்த முட்டை, கோழி உற்பத்தியா ளர்கள் சங்கத்தினர் பாராட்டி யுள்ளனர். கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தலைவாசல் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் பகுதியில் ஆராய்ச்சி மையம் இந்தாண்டு தொடங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com