பள்ளிபாளையம் அருகே கிராமசபைக் கூட்டம்- பி.தங்கமணி பங்கேற்பு

பள்ளிபாளையம் அருகே சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பி. தங்கமணி கலந்து கொண்டார்.
பள்ளிபாளையம் அருகே கிராமசபைக் கூட்டம்- பி.தங்கமணி பங்கேற்பு
Published on

குமாரபாளையம்:

பள்ளிபாளையம் ஒன்றியம் ஓடப்பள்ளியில் ஊராட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் பி. தங்கமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொது சுகாதாரம், திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்தல், தனிநபர் கழிப்பிடத்தை மேம்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது.  

இதில் ஊராட்சி ஒன்றிய பிடிஓ அலமேலு, முன்னாள் தலைவர் செந்தில், முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் மோகனசுந்தரம், கந்தசாமி, சேலம் நாமக்கல் ஆவின் பால்வளத்தலைவர் சின்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com