பேரணியை சிறப்பாக நடத்தினார்- முக அழகிரிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு

தி.மு.க.வின் பல்வேறு இடையூறுகளை தாண்டி அமைதி பேரணியை மு.க. அழகிரி சிறப்பாக நடத்தி உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்தார். #ministersellurraju #alagiri
பேரணியை சிறப்பாக நடத்தினார்- முக அழகிரிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு
Published on

மதுரை:

வாக்காளர் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல் சிறப்பு முகாம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது தந்தை கருணாநிதி இறந்த 30-வது நாளில் அமைதி பேரணியை அவர் நடத்தினார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து இதில் பங்கேற்றனர். தி.மு.க.வின் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி பேரணியை சிறப்பாக நடத்தி காண்பித்தார். இதன் மூலம் மு.க. அழகிரியின் பணிபற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரது எதிர்காலம் பற்றி போக போகத்தான் தெரியவரும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை, மாநகர் மாவட்டத்திலும், புறநகரிலும் நிறைய இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். எனவே நிச்சயம் வெற்றி பெறுவோம்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே. போசை வெற்றி பெற வைத்தார். தி.மு.க. மெகா கூட்டணியில் இருந்த போதும் அந்த கட்சியால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

தமிழகத்தில் 234 தொகுதி களிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju #alagiri

X

Maalai Malar
www.maalaimalar.com