தொடர் விபத்துக்கள் எதிரொலி: ஓராண்டுக்குள் ஆளில்லாத ரெயில்வே கேட்களை அகற்ற மந்திரி உத்தரவு

ஒரே நாளில் மூன்று ரெயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் உயரதிகாரிகளுடன் ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார்.
தொடர் விபத்துக்கள் எதிரொலி: ஓராண்டுக்குள் ஆளில்லாத ரெயில்வே கேட்களை அகற்ற மந்திரி உத்தரவு
Published on

ஒரே நாளில் மூன்று ரெயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் உயரதிகாரிகளுடன் ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார்.

மகாராஸ்டிரா மாநிலம் கந்தலாவில் சரக்கு ரெயில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ராவில் பயணிகள் ரெயில் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜ்தானி விரைவு ரெயில் என மூன்று ரெயில்கள் நேற்று ஒரே நாளில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின.

உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அடுத்தடுத்த நடந்த விபத்துக்கள் ரெயில் பயண பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், மத்திய ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் ரெயில்வே வாரிய அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்தினார். அதில், ரெயில் பாதுகாப்பு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்கள் மற்றும் தடம் புரள்வது ஆகியவைதான் ரெயில் விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து, ஒராண்டுக்குள் அனைத்து ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளை அகற்றுதல், பனிமூட்டமான பகுதிகளில் செல்லும் ரெயில்களின் முகப்புகளில் சிறப்பு விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com