அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

மேல்மலையனூர் அருகே மேல்செவளாம்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
செஞ்சி மஸ்தான் ஆய்வு
செஞ்சி மஸ்தான் ஆய்வு
Published on

மேல்மலையனூர் அருகே மேல்செவளாம்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். இந்த மருத்துவமனையைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும், மருந்து மாத்திரைகள் தங்குதடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்களிடம் கூறினார்.

அப்போது தாசில்தார் நெகருன்னிசா, செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், டாக்டர் சேரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், தேவராஜன், தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மொக்தியார்அலிமஸ்தான், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com