ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை: அமைச்சர் கருப்பணன் அறிக்கை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். #SterliteProtest #KCKaruppannan #SterliteIssue
ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை: அமைச்சர் கருப்பணன் அறிக்கை
Published on

சென்னை:

தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான நோய்களும் உருவாகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-  ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை கண்டித்து மக்கள் அளிக்கும் புகார்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.  

ஸ்டெர்லைட் ஆலையில் மாசுக்கட்டுப்பாடு சாதனங்கள் சரிவர இயக்கப்படுகிறதா என்பது பற்றி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகை தகுந்த சுத்திகரிப்புக்கு பின்னே வெளியேற்றப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகள் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியிலே நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான இசைவாணை சட்டவிதிகளின்படி பரிசீலிக்கப்படும்” 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். #tamilnews #SterliteProtest #KCKaruppannan #SterliteIssue

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com