ஈமச்சடங்கு நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு- அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

ஈமச்சடங்கு நிதி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கந்தசாமி
அமைச்சர் கந்தசாமி
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் கோபிகா பேசியதாவது:-

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதியை முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு மட்டு மில்லாமல் இறக்கும் அனைவருக்கும் ஈமச்சடங்கு நிதி வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இந்த நிதியை உயர்த்தியும், காலம் கடத்தால் இறந்தவுடன் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கந்தசாமி, தாழ்த்தப்பட்டோருக்கு ஈமச்சடங்கு நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை அன்றைய தினமே வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இதேபோல முதியார் உதவித்தொகை பெறுவோருக்கு வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி ரூ.5 ஆயிரத்தை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும். இத்தொகையை அன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com