எந்த கருத்து வேறுபாடும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என திருச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
எந்த கருத்து வேறுபாடும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

திருச்சி ஜி.கார்னரில் இன்று மாலை எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சாதனைகள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், , திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, வெல்ல மண்டிநடராஜன், வளர்மதி மற்றும் எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் மற்றும் பொன்னையன் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம்.

முதல்வர்-துணை முதல்வருக்கு அவரவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com