கஜா புயலால் பாதிப்பு- அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.#Minister #KadamburRaju #Gaja
கஜா புயலால் பாதிப்பு- அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்
Published on

கோவில்பட்டி:

கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வருகின்றனர்.

இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சார்பில் துணிகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து லாரி மூலம் நிவாரணப் பொருள்களுடன் சென்றது. இங்கிருந்து செல்லும் நிவாரண பொருள்கள் தஞ்சாவூர், பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெமினி, சிறுபான்மையோர் பிரிவு திவான்பாட்ஷா, நிர்வாகிகள் போடுசாமி, பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Minister #KadamburRaju

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com