

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தட்சிண திருப்பதி என்று போற்றப்படும் இந்த கோவிலுக்கு ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள்.
இந்நிலையில், வெங்கடேஸ்வர சாமி கோவிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வெங்கடேஸ்வர சாமி சேவா டிரஸ்ட் சார்பில் 51 அடி உயரத்தில் புதிதாக தேர் அமைக்கும் பணி தொடங்கி, மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
சேலம் மண்டலத்திலேயே மிகப்பெரிய தேராக உருவாக்கப்பட்டு வரும், இத்தேரின் வெள்ளோட்டம், வருகிறதை மாதம் நடைபெறும் என டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது, அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், கோவில் அறங்காவலர் நாராயணசாமி, முனிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.