சொந்த ஊருக்கு வந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது.
ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு உடல்.
ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு உடல்.
Published on

ராஜகிரி:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது படத்துக்கு இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் சென்னையில் இருந்து ஆம்புலனஸ் மூலம் புறப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 1 மணியளவில் ராஜகிரி கிராமத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வந்தடைந்தது. அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இறுதி சடங்குக்குப் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வன்னியவாடி அருகே உள்ள தென்னந்தோப்பில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com