அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சி.
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சி.
Published on

ராஜகிரி:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

அதன்பின்னர் சென்னையில் இருந்து ஆம்புலனஸ் மூலம் புறப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 1 மணியளவில் ராஜகிரி கிராமத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வந்தடைந்தது. அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வன்னியவாடி அருகே உள்ள தென்னந்தோப்பில் 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com