கிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு

தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு
Published on

சென்னை:

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியதாவது:

விவசாயிகளுக்கான நிதியுதவியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம் மட்டுமின்றி வேறு மாவட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பதிவு செய்தவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

விவசாயிகளின் கிசான் திட்டத்தில் இனி தவறு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com