சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறுவனை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
Published on

தமிழக அரசு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.

இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் டாப்சிலிப், முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கும் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அந்தந்த முகாம்களிலேயே நடந்து வருகிறது.

அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் இந்த ஆண்டுக்கான வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.

தொடர்ந்து 48 நாட்கள் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பின்னர் யானைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com