அ.தி.மு.க. உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சென்னையில் நடந்த அ.தி.மு.க. உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
அ.தி.மு.க. உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்:

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய சென்னையில் அ.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 5 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் சீனிவாசனிடம் இது குறித்து கேட்டபோது, அவர் அளித்த பதில் விபரம் வருமாறு:-

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நானும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் சம்மதத்துடன் இங்கு வந்து விட்டதால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நாங்கள் இருவரும் சென்னைக்கு செல்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com