டாஸ்மாக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகி உயிர்ப்பலி ஏற்படும்- அமைச்சர் சீனிவாசன்

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகி உயிர்ப்பலி ஏற்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. #TASMAC #DindigulSreenivasan
டாஸ்மாக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகி உயிர்ப்பலி ஏற்படும்- அமைச்சர் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில்கடைகள் சூறையாடப்பட்டது. அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. எனினும் மக்கள் ஆங்காங்கே பல்வேறு கட்ட போராட்டம் செய்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு அமைச்சரே டாஸ்மாக்கடையை ஆதரித்து பேசி இருப்பது திண்டுக்கல்லில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் 114 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. அப்போது இதனை வழங்கி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கு திட்டம் மிகவும் முக்கியமானது. இந்த திட்டத்தின் கீழ் 2018-2019-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ரூ. 250 கோடி மானியத்தில் 1 லட்சம் அம்மா ஸ்கூட்டர்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 3 ஆயிரத்து 90 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 114 பேருக்கு வழங்கப்பட்டுஉள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

அரசு டாஸ்மாக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துவிடும். இதனை குடித்து செத்து மடிந்து விடுவான். உயிரிழப்புகள்தான் ஏற்படும். எனவே உயிரிழப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக்கடைகள் செயல்படுகின்றன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என புரட்சிதலைவர் பாடி உள்ளார். குடிப்பவன் திருந்தினால்தான் இது முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார். #TASMAC #DindigulSreenivasan #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com