பேராவூரணி அருகே மினிலாரி மோதி வாலிபர் பலி

பேராவூரணி அருகே வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் மீது மினிலாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேராவூரணி அருகே மினிலாரி மோதி வாலிபர் பலி
Published on

பேராவூரணி:

பேராவூரணி அருகே ரெகுநாதபுரம் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது32). இவர் சம்பவதன்று தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். 

அப்போது காலகத்தில் இருந்து பூக்கொல்லை நோக்கி வந்த மினிலாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com