திடீரென தீப்பற்றி எரிந்த மினி பஸ்- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

கும்பகோணத்தில் இன்று மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து தீ விபத்து (கோப்பு படம்)
பேருந்து தீ விபத்து (கோப்பு படம்)
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் சுவாமிமலை பேருந்து நிறுத்தத்தில் இன்று பிற்பகல் நின்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பதறிப்போன பயணிகள் அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கினர்.

மேலும், இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த  விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com