கரூர் அருகே பால் வியாபாரி மீது தாக்குதல்

கரூர் அருகே பால் வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் அருகே பால் வியாபாரி மீது தாக்குதல்
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 40). இவர் புன்னம் மேலப்பாளையத்தில் பால் எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் குட்டக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கரூர் வடிவேல் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்பவர் கதிர்வேலை குறுக்கே நின்று தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கற்களை எடுத்து கதிர்வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் கதிர்வேல் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கதிர்வேலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் கதிர்வேல் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com