காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட சாட்டுல்லோ என்ற கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அங்கு விரைந்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர். அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com