ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் தீவிரவாதிகளை குறிவைத்து வீரர்கள் சரமாரி தாக்குதல்களை கொடுத்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com