காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாதி கொல்லப்பட்டான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்துக்குட்பட்ட கிரால்போரா சேக்போரா பகுதியில்  சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com