பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் - பயங்கரவாதி கைது

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதியை கைது செய்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதி
பயங்கரவாதி
Published on

பீகாரில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் சிலர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதலாவதாக பெங்களூரு ராம்நகரில் பதுங்கி இருந்த ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலையடுத்து தொட்டப்பள்ளாபுராவில் பதுங்கி இருந்த ரஹிபுல் ரகுமான் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர்.

குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிகுண்டுகளை தயாரித்து கொடுக்கும் பணியில் ரஹிபுல் ரகுமான் ஈடுபட்டு வந்தார். இவருக்கு உதவியாக சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் நசீர்ஷேக் ஆவார். சிக்கபானவாரா பகுதியில் தங்கியிருந்த இவரை வைத்து நகரில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தனிப்படை அமைத்து நசீர் ஷேக்கை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் நசீர்ஷேக்கை கைது செய்தனர்.
பெங்களூரு அழைத்து வரப்பட்ட அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சில தகவல் கிடைத்ததையடுத்து நசீர்ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com