எம்ஜிஆர் நகரில் இளம்பெண் தற்கொலை

எம்ஜிஆர் நகரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

போரூர்;

எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது 20). இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகள் ஆகிறது.நேற்று இரவு தேவி தீடீரென வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேவியின் தந்தை பெரியசாமி புகார் கொடுத்தார். அதில், கண்ணனின் தாய் தேவியை அடித்து கொடுமைபடுத்தி வந்தார். கடந்த வாரம் தகராறில் ஈடுபட்ட மாமியார் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி அடித்து உதைத்ததாகவும் தேவி என்னிடம் கூறினார் என்று கூறி இருந்தார். இதுதொடர்பாக கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com