தனியார் நிறுவன காவலாளியிடம் துப்பாக்கியை பறித்த 5 பேர் கைது

மேட்டூர் அருகே தனியார் நிறுவன காவலாளியிடம் துப்பாக்கியை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மேட்டூர்:

மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் பணி நிமித்தம் துப்பாக்கியும் வைத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் கருமலைக்கூடல் அருகே புதுக்காடு ஓடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சென்று விட்டது.

இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசில் சத்தியராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த லல்லு பிரசாத்(வயது 26), சீனி என்கிற சீனிவாசன்(22), மேகி என்கிற மேகநாதன்(22), விஜயன் என்கிற வெள்ளையன்(23), கேசவன்(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்டது. அவர்கள் எதற்காக காவலாளியிடம் துப்பாக்கியை வழிப்பறி செய்தனர்? அவர்களுக்கும், காவலாளிக்கும் இடையே முன்விரோதம் எதுவும் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com