மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. #MetturDam
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 5 ஆயிரத்து 665 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 5 ஆயிரத்து 664 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது.

இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 102.74 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.03 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam

X

Maalai Malar
www.maalaimalar.com