மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1½ அடி சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Published on

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் சரிந்து வருகிறது. நேற்று 8ஆயிரத்து 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் சரிந்து 8ஆயிரத்து 237 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 13-ந் தேதி 115.10 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 114.40 அடியானது. இன்று மேலும் சரிந்து 113.75 அடியாக குறைந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 1½ அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com