நீர் திறப்பு அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் 84 அடியாக சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.
நீர் திறப்பு அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் 84 அடியாக சரிவு
Published on

சேலம்:

கடந்த 11-ந் தேதி 4,426 கன அடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 1,884 கன அடியாக இருந்தது. இன்றும் நீர்வரத்து அதே அளவில் நீடித்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நேற்று முன்தினம் முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் பல மடங்கு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

நேற்று 84.83 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் சரிந்து 84.40 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com