மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 943 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8ஆயிரத்து 290 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அங்கு மழையின் தீவிரம் குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

நேற்று அணைக்கு 12 ஆயிரத்து 943 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 8ஆயிரத்து 290 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கடந்த 7-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் நீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 115.10அடியில் இருந்து 114.40 அடியாக குறைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com