அண்ணா சாலை அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்க பாதையுடன் இணைப்பு

அண்ணா சாலையில் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை சுரங்க பாதையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain
அண்ணா சாலை அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்க பாதையுடன் இணைப்பு
Published on

சென்னை:

தற்போது கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும் அண்ணாசாலை டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே இன்னும் சில வாரங்களில் ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

அண்ணா சாலையில் அரசினர் தோட்டத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அது ஓமந்தூரார் எஸ்டேட் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அருகே அமைந்துள்ளது.

பொதுவாக இது பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அதனால் இங்கு பொதுமக்கள் ரோட்டை கடக்க வசதியாக சுரங்க பாதை உள்ளது.

எனவே அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை இந்த சுரங்க பாதையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையம் வரும் பயணிகள் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி மிக எளிதாக பிளாட்பாரத்தை வந்து அடைய முடியும். அதே நேரத்தில் சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று வரவும் வசதியாக இருக்கும்.

அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MetroTrain

X

Maalai Malar
www.maalaimalar.com