

சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக 32 ரெயில் நிலையங்களுடன் 45 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - நேரு பூங்கா வரையில் சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தற்போது நடைபெற்று வருகி றது.
பொதுமக்களிடையே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளில் மெட்ரோ அதிகாரிகள் தீவிர மாக ஈடுபட்டு வந்தனர்.
2-வது கட்டமாக மாத வரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி செல வில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டது. 108 கி.மீட்டர் தூரத் துக்கு 116 ரெயில் நிலை யங்களுடன் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில் கட்டு மானத்துக்கான டெண்டர் விடும் பணி தற்போது தொடங்கி உள்ளது. ரெயில் நிலையத்துக்கான நில ஆர்ஜித பணிகளும் நடைபெற்று வருகிறது. மாதவரம் - தரமணி வரையில் சுரங்க பாதையாகவும், தரமணி - சோழிங்கநல்லூர் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்பட இருக்கிறது.
முதல் கட்டமாக அமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள் அனைத்தும் 200 மீட்டர் நீளத்திலும், 21 மீட்டர் அகலத்திலும் விசாலமாக உருவாக்கப்பட்டது. 2-வது கட்டமாக தற்போது உருவாக்கப்பட இருக்கும் ரெயில் நிலையங்கள் 150 மீட்டர் நீளத்திலும், 21 மீட்டர் அகலத்திலும் சிறிய ரெயில் நிலையங்களாக கட்டப்பட இருக்கிறது.
முதல் கடடமாக உருவாக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களுக்காக 37 ஏக்கர் தனியார் நிலமும், 233 ஏக்கர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டது. 2-வது கட்டமாக அமைய உள்ள மெட்ரோ நிலையங்களுக்கான நில ஆர்ஜித பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக 80 சதவீதம் அரசு நிலமும், 20 சதவீதம் தனியார் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. #tamilnews