சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதல் லெக்: லிவர்பூலை 3-0 என துவம்சம் செய்தது பார்சிலோனா

சுவாரஸ், மெஸ்சி ஆட்டத்தால் சாம்பியன்ஸ் லீக் அரையிறதி முதல் லெக்கில் லிவர்பூலை 3-0 என துவம்சம் செய்தது பார்சிலோனா #UCL #Barcelona
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதல் லெக்: லிவர்பூலை 3-0 என துவம்சம் செய்தது பார்சிலோனா
Published on

26-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அணியால் நீண்ட நேரம் கோல் அடிக்கமுடியவில்லை. 75-வது நிமிடத்தில் அந்த அணியின் கேப்டன் மெஸ்சி கோல் அடித்தார். சுவாரஸ் அடித்த பந்து லிவர்பூல் பகுதியின் கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. அதை மெஸ்சி கோலாக மாற்றினார். அதன்பின் 82-வது நிமிடத்தில் மெஸ்சி ப்ரீ ஹிக் மூலம் கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com