மெர்சல் படத்தை கண்டித்து கரூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிராக விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளதால் இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மெர்சல் படத்தை கண்டித்து கரூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்:

நடிகர் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிராக விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதனை நீக்க வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு காலனி கே. மணி தலைமை தாங்கினார். அகில பாரத இந்து மகா சபா தேசிய செயற் குழு உறுப்பினர் ரவீந்திரன்ஜி கோரிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். இதில் இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் சுரேஷ், நந்து, ரவி, வினோத்குமார், பாலமுருகன், ஈஸ்வரன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மெர்சல் படத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com