சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர எர்டோகன்
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர எர்டோகன்
Published on

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில்,  துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், உடனடியாக சிரியா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என துருக்கி அதிபர் எர்டோகனிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஏஞ்சலா மெர்கல் எர்டோகனிடம் ‘‘இந்த நடடிவக்கையால் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேறும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரமின்மைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த நடவடிக்கையால் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கும்’’ என வலியுறுத்தியதாக அவரது அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com