முறுக்கு வியாபாரி கொலை வழக்கில் தேடப்பட்ட சேலம் வாலிபர் நாமக்கல் கோர்ட்டில் சரண்

முறுக்கு வியாபாரி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் வாலிபர் இன்று நாமக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் சரண் அடைந்தார்.
முறுக்கு வியாபாரி கொலை வழக்கில் தேடப்பட்ட சேலம் வாலிபர் நாமக்கல் கோர்ட்டில் சரண்
Published on

சேலம்:

சேலம் காட்டூரை சேர்ந்தவர் முறுக்கு வியாபாரி கணேசன். இவரை கொலை செய்த ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதில் தொடர்புடைய பழனிசாமி, முத்து ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அல்லிக்குட்டையை சேர்ந்த கார்த்தி(24), பிரபல ரவுடிகளான காட்டூர் ஆனந்தன், முருகன், கோபி, பிரபு ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் கார்த்தி இன்று நாமக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் சரண் அடைந்தார். மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com