ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரையை அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது34). கடந்த 4 வருடங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த மாதம் 17-ந்தேதி அன்று வீட்டில் இருந்து தமிழ்செல்வி மாயமானார். இதனால் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக தமிழ் செல்வியின் பெற்றோர் வடிவேல் தனது மகள் மாயமானது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com