

மதுரை:
மேலூர் அருகே உள்ள ஏ.வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். அப்போது இவரது மனைவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (39) என்பவர் தவறான நோக்கத்தில் பழகி வந்துள்ளார். இதையறிந்த ராஜா, மனைவியையும், ஆனந்த்தையும் கண்டித்தார்.
இதில் ராஜாவுக்கும், ஆனந்த்துக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று ராஜா அழகர்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஆனந்த், அவரது சகோதரர் சின்னசாமி, இவரது மகன் கீர்த்தி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அவரது சகோதரர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.